வாரிசு படத்தின் முதல் பாடல் வெளியாக போகிறது !

‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. 

இந்தப் படத்தை தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருக்கும் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக வாரிசு படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். 

வாரிசு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

பொங்கலையொட்டி, வாரிசு படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் பாடல் வெளிவரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த வாரத்தில் இருந்து வாரிசு படக்குழுவினர் புரோமோஷன் பணிகளை முழு வீச்சில் ஆரம்பிப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

 இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு உரிமத்தை இந்தியாவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டி – சீரிஸ் (T-Series) கைப்பற்றியுள்ளது.