துணிவு Pre Release Event-ல் கலந்துக் கொள்ளும் அஜித்?

துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. 

இந்த நிலையில் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

குறிப்பாக டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன.

அதேசமயம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளுக்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளனர். 

துணிவு திரைப்படத்தின் Pre Release Event நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அஜித்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். 

அவர் கலந்து கொள்ளும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சியை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். 

ஆனால் நடிகர் அஜித்குமார் அது குறித்து இன்னும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

இருந்தாலும் அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் அஜித் கடந்த 10 ஆண்டுகளாக எந்த பட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் உள்ளார். 

துணிவு திரைப்படத்தின் Pre Release Event நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டால் அது படத்திற்கு பெரும் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.