500 கோடி வசூலை கடந்த பொன்னியின் செல்வன்!

மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 1' தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் பல திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

புதிய படங்கள் வெளியானபோதிலும் படத்திற்கான தொடர்ச்சியான வரவேற்பு கொஞ்சம் கூட குறையவில்லை.

'பொன்னியின் செல்வன் 1' அதன் 32 வது நாள் முடிவில் உலகளவில் ரூ.500 கோடி வசூலை எட்டியுள்ளது

'பொன்னியின் செல்வன் 1' தமிழகத்தில் சுமார் ரூ.230 கோடிகளை வசூலித்து மாநிலத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

படத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு வசூல் ரூ.335 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 

'பொன்னியின் செல்வன்' படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. 

முதல் பாகமே படத்தின் பட்ஜெட்டை வசூலித்து அதிக லாபம் ஈட்டிய படமாக மாற்றியுள்ளது. 

இரண்டாம் பாகம் 2023-ஆம் ஆண்டின் முற்பகுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.