சிம்பு வின் ‘பத்து தல’ரிலீஸ் அப்டேட் 

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. 

கன்னடத்தில் வெளியான முஃப்தி திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் சிவராஜ் குமார் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். 

முஃப்தி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக சிம்புவின் பத்து தல படம் உருவாகி வருகிறது. 

கன்னியாகுமரி பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, தற்போது ஷூட்டிங் நிறைவு பெறும் நிலையில் உள்ளது

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து சிம்பு – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. 

இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்திற்கு ஷூட்டிங் மீதம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

 முன்னதாக பத்து தல படத்தை டிசம்பர் 14-ஆம்தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு, படக்குழுவினர் பணியாற்றி வந்தனர். 

ஆனால் தற்போதைய சூழலில் பத்து தல படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.